Monday, September 17, 2012

பைரவர் வழிபாடு!



சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.
* பைரவர் என்பது வடமொழிச்சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளும் பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு "பைரவர்' என்பது பெயராயிற்று.
* பைரவருக்கு சேஷத்திர பாலகமூர்த்தி என்றும் ஒரு பெயருண்டு. சேஷத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். கோயிலைக் காப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
* பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஞ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.

* காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் காணப்படுகின்றன.
* தாராசுரம் மற்றும் திருப்போரூரில் பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
* பைரவரின் பொதுவான வாகனம் நாய் ஆகும். ஒற்றை நாய் வாகனம் காணப்பட்டாலும் நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. ஆனால் திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.
* அஷ்ட பைரவ வடிவங்களில் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் ஆகியவை வாகனங்களாகக் காட்டப்பட்டுள்ளன.
* பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.


சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர். "சூரிய ஜெயந்தி' என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, "சப்தமி திதி' என்கிறோம்.
தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி. திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, "அர்த்த பிரம்மோற்சவம்' என்று பெயர். "அர்த்த' என்றால், "பாதி!' பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், "பிரம்மோற்சவம்' என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, "அர்த்த பிரம்மோற்சவம்' என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் இந்த நாளில் சூரியனுக்குரிய ஆயிரம் பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும். பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு. இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். அவரே, நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். இவர் ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள். இந்நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும். இந்த நாளில் துவங்கி, தினமும் சூரியோதய நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது நல்ல நாள்.
இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள், கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.
இவ்வாண்டு ரதசப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காலையிலேயே நீராடி, பணிகளை விரைவில் துவக்கி விடுங்கள். பணக்காரர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

 சரம்                                         ஸ்திரம்                                           உபயம்
ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த 12 ராசிகளை அந்தக் காலத்திலேயே ரிஷிகள் மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளையும் சர ராசிகள் என்றும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு ராசிகளையும் ஸ்திர ராசிகள் என்றும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளையும் உபய ராசிகள் என்றும் வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதன் விளக்கத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
  மீனம்
 உபயம்
 மேஷம்
    சரம்                    
ரிஷபம்
    ஸ்திரம்
 மிதுனம்
  உபயம்
  கும்பம்
  ஸ்திரம்

         ராசிக்கட்டம்
 கடகம்
  சரம்
  மகரம்
   சரம்
 சிம்மம்
   ஸ்திரம்
 தனுசு
  உபயம்
 விருச்சிகம்
   ஸ்திரம்
 துலாம்
   சரம்
கன்னி
   உபயம்



தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
03. இந்திய அரசின் இணையதள முகவரி
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைஇணைய தள முகவரி
14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

No comments:

Post a Comment